< Back
கிரிக்கெட்
நாங்கள் இன்னும் நிறைய கோப்பைகளை வெல்லவேண்டும்: சொல்கிறார் மொயீன் அலி

கோப்புப்படம் 

கிரிக்கெட்

நாங்கள் இன்னும் நிறைய கோப்பைகளை வெல்லவேண்டும்: சொல்கிறார் மொயீன் அலி

தினத்தந்தி
|
8 Nov 2022 4:40 PM IST

சிறந்த அணியாக திகழும் எங்களது அணி இன்னும் நிறைய கோப்பைகளை வெல்லவேண்டுமென இங்கிலாந்து ஆல்ரவுண்டர் மொயீன் அலி தெரிவித்துள்ளார்.

அடிலெய்டு,

டி20 உலகக் கோப்பை அரையிறுதி ஆட்டங்கள் நாளை தொடங்குகின்றன. அடிலெய்டில் நாளை மறுதினம் நடைபெறும் 2-வது அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா- இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இங்கிலாந்து அணி கடந்த 2015-ல் இருந்து சிறந்த ஒயிட் பால் அணியாக திகழ்ந்து வருகிறது. டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து முற்றிலும் மாறுபட்ட வீரர்களை கொண்டு கட்டமைத்துள்ளது. அதிரடி பேட்ஸ்மேன், அதிவேக பந்து வீச்சாளர்கள் மட்டுமே ஒயிட் பால் கிரிக்கெட்டில் விளையாடி வருகிறார்கள். இதனால் உலகின் சிறந்த ஒயிட் பால் கிரிக்கெட் அணி என இங்கிலாநது அழைக்கப்படுகிறது.

ஆனால், அந்த அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சு ஆல்-ரவுண்டரான மொயீன் அலி, நாங்கள் சிறந்த அணி என்று அழைக்கப்பட வேண்டுமென்றால், இன்னும் அதிக அளவில் கோப்பைகளை வெல்ல வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மொயீன் அலி கூறியதாவது:-

நாங்கள் சிறந்த ஒயிட்-பால் கிரிக்கெட் அணி என பேசுகிறார்கள். இங்கிலாந்து அணி மிகவும் சிறந்த நிலையில் உள்ளது. ஆனால், நாங்கள் ஒரேயொரு கோப்பையை மட்டுமே வென்றுள்ளோம். ஒரு அணியாகவும், நாடாகவும் அதிக வெற்றிகளை பெறத் தொடங்குவது முக்கியம். பின்னர், நம்மை நாமே சிறந்த அணி என அழைத்துக் கொள்ள முடியும்.

நாங்கள் அரையிறுதிக்கு முன்னேற விரும்பினோம். கடந்த காலங்களில் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றுள்ளோம். தற்போது, நாங்கள் மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியதாக நினைக்கவில்லை. இருந்தாலும், அரையிறுதிக்கு முன்னேறி விட்டோம். எங்களுடைய சிறந்த ஆட்டம் இன்னும் வெளிப்படவில்லை.

நாங்கள் இருக்க விரும்பும் இடத்திற்கு அருகில் இருந்ததாக நான் நினைக்கவில்லை, ஆனால் அந்த இலக்கை அடைவதற்கு இப்போது நல்ல வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அடுத்த இரண்டு போட்டிகளிலும், எங்களுடைய சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினால், உலகக் கோப்பையை வெல்வோம். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்