2-வது டெஸ்ட்: ஆடும் லெவன் அணியை அறிவித்த இங்கிலாந்து மற்றும் இலங்கை
|இலங்கை - இங்கிலாந்து இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி இன்று நடைபெற உள்ளது.
லண்டன்,
இங்கிலாந்துக்கு சென்றுள்ள இலங்கை கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதலாவது டெஸ்டில் இங்கிலாந்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்சில் இன்று மாலை 3.30 மணியளவில் தொடங்குகிறது.
இந்நிலையில் இந்த போட்டிக்கான ஆடும் லெவன் (பிளேயிங் 11) அணியை இரு அணிகளும் அறிவித்துள்ளன.
இரு அணிகளுக்கான பிளேயிங் 11 பின்வருமாறு:-
இங்கிலாந்து: பென் டக்கெட், டான் லாரன்ஸ், ஒல்லி போப் (கேப்டன்), ஜோ ரூட், ஹாரி புரூக், ஜாமி சுமித் (விக்கெட் கீப்பர்), கிறிஸ் வோக்ஸ், கஸ் அட்கின்சன், மேத்யூ பாட்ஸ், ஆலி ஸ்டோன், சோயிப் பஷீர்
இலங்கை: திமுத் கருணாரத்னே, நிஷான் மதுஷ்கா, பதும் நிசங்கா, ஏஞ்சலோ மேத்யூஸ், தினேஷ் சண்டிமால், தனஞ்சய டி சில்வா (கேப்டன்), கமிந்து மெண்டிஸ், பிரபாத் ஜெயசூரிய, அசித்த பெர்னாண்டோ, லஹிரு குமாரா, மிலன் ரத்நாயக்கே.