< Back
கிரிக்கெட்
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த  இங்கிலாந்து அதிரடி வீரர்...ரசிகர்கள் அதிர்ச்சி

Image : ICC 

கிரிக்கெட்

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த இங்கிலாந்து அதிரடி வீரர்...ரசிகர்கள் அதிர்ச்சி

தினத்தந்தி
|
28 Aug 2024 3:22 PM IST

சர்வதேச டி20 போட்டியில் அதிவேகமாக 1,000 ரன்களை கடந்த வீரர் என்ற பெருமையையும் டேவிட் மாலன் பெற்றார்.

லண்டன்,

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் அதிரடி வீரரான டேவிட் மலான் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இங்கிலாந்து அணிக்காக 22 டெஸ்ட் , 30 ஒரு நாள் போட்டி , 62 டி20 போட்டிகளில் டேவிட் மலான் விளையாடியுள்ளார். கடந்த 2020-ம் ஆண்டில் டி20 பேட்ஸ்மேன் தரவரிசையில் முதலிடம் பிடித்து டேவிட் மலான் சாதனை படைத்தார். சர்வதேச டி20 போட்டியில் அதிவேகமாக 1,000 ரன்களை கடந்த வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றார். 2022-ம் ஆண்டில் டி20 உலகக் கோப்பை வென்ற இங்கிலாந்து அணியில் மலான் இடம்பிடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்