சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து இங்கிலாந்து அதிரடி வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ் ஓய்வு..!
|இங்கிலாந்து அதிரடி வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்
லண்டன் ,
இங்கிலாந்து அதிரடி வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார் .ஹேல்ஸ் சர்வதேச போட்டியில் கடைசியாக கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்ற இங்கிலாந்து அணியில் இடம் பெற்றிருந்தார் . உலகக்கோப்பை தொடரில் அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் .
தொடரில் அரையிறுதி போட்டியில் இந்திய அணிக்கு எதிராக 86 ரன்கள் குவித்து இங்கிலாந்து வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார்
டி20 , ஒருநாள் போட்டி , டெஸ்ட் என 156 போட்டிகளில் விளையாடி 7 சதம் உட்பட 5066 ரன்கள் குவித்துள்ளார்
ஒய்வு முடிவு குறித்து அலெக்ஸ் ஹேல்ஸ் கூறியதாவது ,
3 வடிவ போட்டிகளிலும் 156 போட்டிகளில் எனது நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தியது ஒரு முழுமையான பாக்கியம். வாழ்நாள் முழுவதும் நீடிக்கும் சில நினைவுகளையும் சில நட்பையும் நான் பெற்றுள்ளேன் , மேலும் இதுவே சரியான நேரம் என்று உணர்கிறேன் . "இங்கிலாந்து ஜெர்சியில் நான் இருந்த காலம் முழுவதும், மிக உயர்ந்த சிலவற்றையும் சில குறைந்த தாழ்வுகளையும் அனுபவித்திருக்கிறேன். இது ஒரு நம்பமுடியாத பயணமாகும், மேலும் இங்கிலாந்துக்கான எனது கடைசி ஆட்டம் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் வென்றது என்பதில் நான் மிகவும் திருப்தி அடைகிறேன்.என தெரிவித்துள்ளார் .