< Back
கிரிக்கெட்
இந்தியாவுக்கு எதிரான ஆட்டம்: அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து நியூசிலாந்து தடுமாற்றம்...!
கிரிக்கெட்

இந்தியாவுக்கு எதிரான ஆட்டம்: அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து நியூசிலாந்து தடுமாற்றம்...!

தினத்தந்தி
|
22 Oct 2023 2:55 PM IST

இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து நியூசிலாந்து தடுமாறி வருகிறது.

தர்மசாலா,

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 21வது லீக் ஆட்டம் தர்மசாலாவில் நடைபெற்று வருகிறது. இதில், இந்தியா - நியூசிலாந்து மோதுகின்றன. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்தியா பந்து வீச்சு தேர்வு செய்தது.

இதனை தொடர்ந்து நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக கான்வே, வில் யங்க் களமிறங்கினர். 9 பந்துகளை சந்தித்த கான்வே ரன் எதுவும் எடுக்காத நிலையில் (0) சிராஜ் பந்து வீச்சில் கேட்ச் மூலம் அவுட் ஆனார். மற்றொரு தொடக்க வீரரான வில் யங்க் 27 பந்துகளில் 17 ரன்கள் எடுத்திருந்த நிலையில் முகமது ஷமி பந்து வீச்சில் அவுட் ஆனார். நியூசிலாந்து 8.1 ஓவரில் 19 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

தற்போது, நியூசிலாந்து அணியின் 10 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 34 ரன்கள் எடுத்த நிலையில் உள்ளது. ரவீந்திரா 6 ரன்னுடனும், மிச்சேல் 7 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

மேலும் செய்திகள்