< Back
கிரிக்கெட்
துலீப் கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டி:தெற்கு மண்டல அணி தடுமாற்றம்

கோப்புப்படம்

கிரிக்கெட்

துலீப் கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டி:தெற்கு மண்டல அணி தடுமாற்றம்

தினத்தந்தி
|
13 July 2023 2:00 AM IST

துலீப் கோப்பை கிரிக்கெட்டில் தெற்கு-மேற்கு மண்டலம் அணிகள் இடையிலான இறுதிப்போட்டி பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது.

பெங்களூரு,

துலீப் கோப்பை கிரிக்கெட்டில் தெற்கு-மேற்கு மண்டலம் அணிகள் இடையிலான இறுதிப்போட்டி பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது. முதலில் பேட் செய்த தெற்கு மண்டல அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ரவிகுமார் சமார்த் 7 ரன்னிலும், மயங்க் அகர்வால் 28 ரன்னிலும் கேட்ச் கொடுத்து வெளியேறினர்.

முன்னதாக மயங்க் அகர்வால் 24 ரன்னை தொட்ட போது முதல் தர கிரிக்கெட்டில் 7 ஆயிரம் ரன் மைல்கல்லை எட்டினார். இதைத்தொடர்ந்து கேப்டன் ஹனுமா விஹாரி, திலக் வர்மாவுடன் கைகோர்த்தார். இருவரும் 3-வது விக்கெட்டுக்கு 79 ரன்கள் சேர்த்த நிலையில் திலக் வர்மா 40 ரன்னில் கேட்ச் ஆனார்.

அடுத்து வந்த ரிக்கி புய் (9 ரன்), சச்சின் பேபி (7 ரன்), சாய் கிஷோர் (5 ரன்) சோபிக்கவில்லை. மறுமுனையில் நிலைத்து நின்று ஆடிய ஹனுமா விஹாரி 63 ரன்னில், ஷம்ஸ் முலானி வீசிய சுழற்பந்தில் போல்டு ஆனார்.

தெற்கு மண்டல அணி முதல் இன்னிங்சில் 65 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 182 ரன்கள் எடுத்து தடுமாறி கொண்டிருந்த போது போதிய வெளிச்சமின்மை காரணமாக முதல் நாள் ஆட்டம் அத்துடன் முடித்து கொள்ளப்பட்டது. இன்று 2-வது நாள் ஆட்டம் நடக்கிறது.

மேலும் செய்திகள்