< Back
கிரிக்கெட்
துலீப் கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டி: மேற்கு மண்டலத்தை வீழ்த்தி தெற்கு மண்டல அணி சாம்பியன்...!

The image was grab from a video released by @BCCI

கிரிக்கெட்

துலீப் கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டி: மேற்கு மண்டலத்தை வீழ்த்தி தெற்கு மண்டல அணி சாம்பியன்...!

தினத்தந்தி
|
16 July 2023 2:05 PM IST

துலீப் கோப்பை கிரிக்கெட் இறுதி ஆட்டத்தில் மேற்கு மண்டல அணியை வீழ்த்தி தெற்கு மண்டல அணி அபார வெற்றி பெற்றது.

பெங்களூரு,

துலீப் கோப்பை கிரிக்கெட்டில் தெற்கு-மேற்கு மண்டல அணிகள் இடையிலான இறுதிப்போட்டி பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்தது. இதில் முதல் இன்னிங்சில் முறையே தெற்கு மண்டல அணி 213 ரன்னும், மேற்கு மண்டல அணி 146 ரன்னும் எடுத்தன. 67 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய தெற்கு மண்டல அணி 3-வது நாள் முடிவில் 7 விக்கெட்டுக்கு 181 ரன்கள் எடுத்திருந்தது.

4-வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய தெற்கு மண்டல அணி 230 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. மேற்கு மண்டலம் தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் தர்மேந்திரசிங் ஜடேஜா 5 விக்கெட் வீழ்த்தினார். இதனால் மேற்கு மண்டல அணிக்கு 298 ரன்களை வெற்றி இலக்காக தெற்கு மண்டலம் நிர்ணயித்தது.

இந்த இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சை ஆடிய மேற்கு மண்டல அணி 62.3 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 182 ரன்கள் எடுத்திருந்த போது போதிய வெள்ளிச்சமின்மையால் ஆட்டம் அத்துடன் முடித்து கொள்ளப்பட்டது. பிரித்வி ஷா 7 ரன்னிலும், புஜாரா 15 ரன்னிலும், சூர்யகுமார் யாதவ் 4 ரன்னிலும் ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்தனர். கேப்டன் பிரியங்க் பன்சால் 92 ரன்னுடனும் (205 பந்து, 11 பவுண்டரி), அதித் சேத் ரன் எதுவும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர்.

இந்நிலையில் தொடர்ந்து இன்று பேட்டிங் ஆடிய மேற்கு மண்டல அணி 84.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 222 ரன்களே எடுத்தது. இதனால் 75 ரன்கள் வித்தியாசத்தில் தெற்கு மண்டல அணி அபார வெற்றி பெற்றது. தெற்கு மண்டல அணி தரப்பில் கெளஷிக், சாய் கிஷோர் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

மேலும் செய்திகள்