< Back
கிரிக்கெட்
பயிற்சியாளர் பதவிக்கு மீண்டும் விண்ணப்பிக்கவில்லை - டிராவிட்

ராகுல் டிராவிட் (image courtesy: BCCI via ANI)

கிரிக்கெட்

பயிற்சியாளர் பதவிக்கு மீண்டும் விண்ணப்பிக்கவில்லை - டிராவிட்

தினத்தந்தி
|
4 Jun 2024 2:58 AM IST

பயிற்சியாளர் பதவிக்கு தான் மீண்டும் விண்ணப்பிக்கவில்லை என்று டிராவிட் தெரிவித்துள்ளார்.

நியூயார்க்,

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டின் பதவி காலம் இந்த மாதத்துடன் முடிவுக்கு வருகிறது. இந்த நிலையில் இந்திய அணியின் பயிற்சியாளராக 20 ஓவர் உலகக் கோப்பையே தனது கடைசி தொடர் என்றும், பயிற்சியாளர் பதவிக்கு தான் மீண்டும் விண்ணப்பிக்கவில்லை என்றும் டிராவிட் நேற்று தெரிவித்தார். இதன் மூலம் அவர் பயிற்சியாளர் போட்டியில் இல்லை என்பது தெளிவாகியுள்ளது.

மேலும் செய்திகள்