கவலை பட வேண்டாம் நான் இருக்கிறேன்' - ரோகித் சர்மாவின் கேப்டன்சி குறித்து ஹர்திக் பாண்ட்யா கருத்து!
|ரோகித் சர்மாவின் கேப்டன்சி குறித்து ஹர்திக் பாண்ட்யா கருத்து தெரிவித்துள்ளார்.
புனே,
13-வது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவின் 10 நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள இந்தியா, ஆஸ்திரேலியா, நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து ஆகிய அணிகள் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்குள் நுழையும். அரைஇறுதி சுற்றை எட்ட குறைந்தது 6 வெற்றி தேவையாகும்.
இந்த தொடரில் இந்திய அணி ரோகித் சர்மாவின் தலைமையில் களமிறங்கியது. தற்போது மூன்று போட்டிகளில் விளையாடியுள்ள இந்திய அணி மூன்றிலும் வென்றுள்ளது. இதில் ரோகித் சர்மாவின் கேப்டன்சியை அனைவரும் பாராட்டினார்.
இந்நிலையில் இந்திய அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் ஹர்திக் பாண்ட்யாவிடம் ரோகித் சர்மாவின் கேப்டன்சி குறித்து கேட்டபோது, 'ரோஹித் ஷர்மாவின் கேப்டன்சியின் தன்மை சிறப்பானது. அவர் எந்த சூழ்நிலையிலும் மற்ற வீரர்களுக்கு உறுதுணையாக இருப்பார். எதிரணியினர் அடித்த பந்து பவுண்டரிக்கு சென்றாலும் கூட, கவலைப்பட வேண்டாம் நான் இருக்கிறேன் என கூறுவார்' என்று அவர் கூறினார்.