< Back
கிரிக்கெட்
விராட் கோலியை ஸ்லெட்ஜிங் செய்யாதீர்கள்...அப்படி செய்தால்...- பந்துவீச்சாளர்களுக்கு அறிவுரை வழங்கிய தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரர்

Image Courtesy: AFP

கிரிக்கெட்

'விராட் கோலியை ஸ்லெட்ஜிங் செய்யாதீர்கள்...அப்படி செய்தால்...'- பந்துவீச்சாளர்களுக்கு அறிவுரை வழங்கிய தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரர்

தினத்தந்தி
|
29 Aug 2023 10:36 AM GMT

இந்தியாவில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது.

மும்பை,

இந்தியாவில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொள்கின்றன. கடந்த 10 வருடங்களாக எந்த வித ஐசிசி கோப்பையையும் வெல்லாத இந்திய அணி இந்த முறை சொந்த மண்ணில் நடைபெறும் உலகக்கோப்பையை கைப்பற்றும் முனைப்பில் உள்ளது.

இந்நிலையில் சொந்த மண்ணில் நடைபெறும் இந்த உலகக்கோப்பையில் எதிரணி பந்துவீச்சாளர்கள் விராட் கோலியை ஸ்லெட்ஜிங் செய்யாமல் இருப்பதே அவர்கள் சிறப்பாக செயல்படுவதற்கான வழி என தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரர் மகாயா நிதினி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,

ஒரு பந்துவீச்சாளராக விராட் கோலியை பற்றி உங்களுக்கு நான் சொல்ல விரும்புவது என்னவென்றால் அவரிடம் ஸ்லெட்ஜிங்கில் ஈடுபடாதீர்கள். எந்த எதிரணி வீரராவது நம்மை சீண்ட மாட்டார்களா அதனால் நாம் வெறித்தனமாக செயல்பட மாட்டோமா என்று அவர் பசியுடன் காத்திருப்பார்.

எனவே அவரை நீங்கள் தனிமையாக விட்டு தன்னுடைய சொந்த ஆட்டத்தை விளையாடி தவறுகளை செய்ய விட வேண்டும். அப்படி தான் எதிரணிகள் அவரை அவுட் செய்ய முடியும். ஏனெனில் எதிரணியினர் தம்மை சீண்டாமல் இருந்தால் அது தான் அவருக்கு கடுப்பாக இருக்கும். எனவே அவரை ஸ்லெட்ஜிங் செய்யாதீர்கள்.

அப்படி செய்தால் அதற்கான பரிசினை நீங்கள் பெறுவீர்கள். குறிப்பாக தென் ஆப்பிரிக்க பந்துவீச்சாளர்களுக்கு நான் மீண்டும் சொல்கிறேன் அவரை ஸ்லெட்ஜிங் செய்யாதீர்கள். ஏனெனில் நீங்கள் ஸ்லெட்ஜிங் செய்யும் போது அவர் இன்னும் உத்வேகமடைந்து அபாரமாக செயல்படுவார்.

எனவே அவருக்கு எதிராக அமைதியாக இருங்கள். மற்ற பேட்ஸ்மேன்களை வம்பிழுப்பது போல அவரிடம் நீங்கள் எதையும் செய்யாதீர்கள். மாறாக அமைதியாக இருந்து அவருக்கு அலுப்பு தட்டுவதைப் போன்ற உணர்வை ஏற்படுத்துங்கள். அதுவே அவரை நீங்கள் அவுட் செய்வதற்கான சிறந்த வழியாகும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்