< Back
கிரிக்கெட்
ஐபிஎல்லில் விளையாட வேண்டாம் - கிரிக்கெட் வீரர்களுக்கு கபில்தேவ் அறிவுரை

கோப்புப்படம்

கிரிக்கெட்

"ஐபிஎல்லில் விளையாட வேண்டாம்" - கிரிக்கெட் வீரர்களுக்கு கபில்தேவ் அறிவுரை

தினத்தந்தி
|
9 Oct 2022 11:07 PM IST

3 வடிவங்களில் விளையாடுவது அழுத்தமாக இருந்தால் ஐ.பி.எல்.லில் ஆடாதீர்கள் என்று கபில் தேவ் அறிவுறுத்தியுள்ளார்.

புதுடெல்லி,

ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள டி20 உலக கோப்பையை வென்றே தீரும் தீவிரத்தில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தயாராகிவருகிறது.

இந்நிலையில், பும்ரா, ஜடேஜா ஆகிய முன்னணி வீரர்கள் காயம் காரணமாக டி20 உலக கோப்பையில் ஆடவில்லை. பும்ராவுக்கு மாற்று வீரராக அறிவிக்கப்பட வாய்ப்புள்ள வீரர்களில் ஒருவராக இருந்த தீபக் சாஹரும் காயமடைந்தார்.

இந்நிலையில் 3 வடிவங்களில் விளையாடுவது அழுத்தமாக இருந்தால் ஐ.பி.எல்.லில் ஆடாதீர்கள் என்று கபில் தேவ் அறிவுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக மேலும் அவர் கூறுகையில், "ஐபிஎல் கிரிக்கெட்டில் விளையாடுவதால் அழுத்தம் இருப்பதாக ஒரு சில புகார் உள்ளது. அதனை சிலர் வெளிப்படையாக தொலைக்காட்சியில் சொல்லி நான் பார்த்துள்ளேன். அதனால் அவர்களுக்கு இதனை சொல்லிக் கொள்கிறேன். டிவியில் நிறைய முறை இதனை சொல்லி நான் கேட்டுள்ளேன். ஐபிஎல் விளையாடுவதால் வீரர்கள் மீது அதிக அளவு அழுத்தம் இருப்பதாக சொல்கிறார்கள். அப்படி என்றால் நான் சொல்லிக் கொள்வது ஒன்றே ஒன்றுதான். அழுத்தத்தை உணரும் வீரர்கள் வீரர்கள் ஐபிஎல் விளையாட வேண்டாம்.

வீரர்கள் கிரிக்கெட் விளையாட்டை ரசித்து விளையாடினால் அங்கு அழுத்தம் இருக்காது. மன அளவிலான சோர்வு குறித்து என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. நான் ஒரு விவசாயி. ஆனால் விளையாட்டை ரசித்து, ரொம்ப அனுபவித்து விளையாடுவேன். அங்கு அழுத்தம் இருப்பதாக நான் உணர்ந்தது இல்லை. அதே தான் வீரர்களுக்கும். விளையாட்டை ரசித்து விளையாடினால் அழுத்தம் ஏதும் இருக்காது" என்று கபில் தேவ் கூறினார்.

மேலும் செய்திகள்