< Back
கிரிக்கெட்
டக் அவுட்டான கில்... ஆதரவு கொடுத்த இந்திய முன்னாள் வீரர்
கிரிக்கெட்

டக் அவுட்டான கில்... ஆதரவு கொடுத்த இந்திய முன்னாள் வீரர்

தினத்தந்தி
|
19 Sept 2024 4:04 PM IST

வங்காளதேசத்திற்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் கில் டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார்.

சென்னை,

இந்தியா - வங்காளதேசம் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற வங்காளதேச அணியின் கேப்டன் நஜ்மூல் ஹொசைன் சாண்டோ பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டகாரர்களாக ஜெய்ஸ்வால் - ரோகித் ஆகியோர் களமிறங்கினர். இதில் ரோகித் 6 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். அதனைதொடர்ந்து களமிறங்கிய கில் 8 பந்துகளை சந்தித்த நிலையில் டக் அவுட் ஆகி பெவிலியன் திரும்பினார்.

இந்நிலையில் இப்போட்டியில் சுப்மன் கில் துரதிர்ஷ்டவசமாக அவுட்டானதால் அவரை யாரும் விமர்சிக்க வேண்டியதில்லை என முன்னாள் வீரர் பார்த்தீவ் படேல் ஆதரவு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "சுப்மன் கில் துரதிர்ஷ்டவசமாக அவுட்டானார் என்று நினைக்கிறேன். கிரிக்கெட்டில் துரதிர்ஷ்டவசமாக அவுட்டாக 2 வழிகள் இருக்கின்றன. ஒன்று ரன் அவுட் ஆவது. மற்றொன்று லெக் சைட் திசையில் விளையாடி கீப்பரிடம் கேட்ச் கொடுத்து அவுட்டாவதாகும். அதுதான் சுப்மன் கில்லுக்கு இன்று நடந்தது. லெக் சைட் திசையில் வரும் பந்தை பார்த்ததும் சில நேரங்களில் உங்களை அறியாமலேயே உள்ளுணர்வால் உங்களுடைய பேட் அடிக்க சென்று விடும். அந்த நேரங்களில் பந்து உங்களுடைய பேட்டின் நல்ல இடங்களில் பட்டால் பவுண்டரி செல்லும். இல்லையேல் சுப்மன் கில் போன்று எட்ஜ் வாங்கி துரதிர்ஷ்டவசமாக அவுட்டாகி செல்ல நேரிடும்" என்று கூறினார்.

மேலும் செய்திகள்