< Back
கிரிக்கெட்
ஏற்றத்தாழ்வுகள் பார்க்கிறதா பிசிசிஐ? உண்மையை உடைத்த நடராஜன்
கிரிக்கெட்

ஏற்றத்தாழ்வுகள் பார்க்கிறதா பிசிசிஐ? உண்மையை உடைத்த நடராஜன்

தினத்தந்தி
|
26 July 2024 2:46 PM IST

நடராஜன் தற்போது டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் திருப்பூர் அணிக்காக விளையாடி வருகிறார்.

சென்னை,

இந்திய கிரிக்கெட் வீரரும், ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக விளையாடி வருபவர் தமிழகத்தை சேர்ந்த நடராஜன். யார்க்கர் பந்துவீச்சில் புகழ்பெற்ற நடராஜன் தற்போது டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் திருப்பூர் அணிக்காக விளையாடி வருகிறார்.

இந்த நிலையில், சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட கிரிக்கெட் வீரர் நடராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) வீரர்களிடம் ஏற்றத் தாழ்வுகளை பார்ப்பதில்லை என தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது,

பிசிசிஐ எனக்கு போதுமான வாய்ப்புகளை அளிக்கிறது. காயம் காரணமாக சில போட்டிகளில் நான் பங்கேற்க முடியவில்லை . பிசிசிஐ வீரர்களிடம் எந்தவொரு ஏற்றத் தாழ்வுகளையும் பார்ப்பதில்லை; கிரிக்கெட் வாரியத்தின் ஒத்துழைப்பால்தான் இந்திய கிரிக்கெட் வீரராக உருவாகியிருக்கிறேன். என தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்