< Back
கிரிக்கெட்
பெங்களூருவில் இரவு விருந்து.. பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வெளியிட்ட வீடியோ
கிரிக்கெட்

பெங்களூருவில் இரவு விருந்து.. பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வெளியிட்ட வீடியோ

தினத்தந்தி
|
17 Oct 2023 8:12 PM IST

பெங்களூருவில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் பாகிஸ்தான் அணி வீரர்களுக்கு இரவு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பெங்களூரு,

13-வது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் கலந்து கொண்டு விளையாடி வரும் பாகிஸ்தான் அணி, வரும் 20-ந்தேதி பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணியுடன் மோத உள்ளது.

இதற்காக பெங்களூரு சென்றுள்ள பாகிஸ்தான் அணி வீரர்களுக்கு அங்குள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் இரவு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த விருந்தில் கலந்து கொண்ட பாகிஸ்தான் வீரர்கள் உற்சாகத்துடன் உணவு உட்கொண்டனர். இது தொடர்பான வீடியோவை பாகிஸ்தான் கிரிக்கெட் அணி நிர்வாகம் தனது 'எக்ஸ்' சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளது.



மேலும் செய்திகள்