ஐ.பி.எல். 2025: புதிய பொறுப்புடன் மீண்டும் பெங்களூரு அணியில் களமிறங்கும் தினேஷ் கார்த்திக்
|இந்த வருடம் நடைபெற்ற சீசனுடன் ஐ.பி.எல். தொடரிலிருந்து தினேஷ் கார்த்திக் ஓய்வை அறிவித்தார்.
பெங்களூரு,
தினேஷ் கார்த்திக் இந்திய அணியின் முன்னாள் வீரரும், ஐ.பி.எல். தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகாக விளையாடியவரும் ஆவார். இவர் இந்த ஆண்டு முடிவடைந்த ஐ.பி.எல். -ன் 17-வது சீசனுடன் ஐ.பி.எல். தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
இவர் ஐ.பி.எல். தொடரில் விளையாடிய நாட்களில் பல அணிக்காக விளையாடி இருந்தாலும் பெங்களூரு அணிக்காக விளையாடியபோதே ரசிகர்களால் பெருமளவில் போற்றப்பட்டார். இவர் ஓய்விற்கு ரசிகர்கள் பலர் வருத்தமடைந்தனர். ஐ.பி.எல். தொடரிலிருந்து ஓய்வு அறிவித்த சில நாட்களிலேயே சர்வதேச கிரிக்கெட்டிலிருந்தும் விடைபெற்றார்.
இந்நிலையில் அடுத்த வருடம் (2025) நடைபெற உள்ள ஐ.பி.எல். தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் புதிய பொறுப்புடன் மீண்டும் களமிறங்க உள்ளார். அந்த அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மற்றும் ஆலோசகராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதனை பெங்களூரு அணி நிர்வாகம் தனது அதிகாரபூர்வ எக்ஸ் பக்கத்தில் அறிவித்துள்ளது.