< Back
கிரிக்கெட்
கிரிக்கெட்
ஐ.சி.சி. டி-20 தரவரிசை பட்டியலில் தினேஷ் கார்த்திக் முன்னேற்றம்
|23 Jun 2022 4:03 AM IST
பந்து வீச்சாளர்களின் தரவரிசையில் ஆஸ்திரேலியாவின் ஹேசில்வுட் முதலிடத்தில் நீடிக்கிறார்.
துபாய்,
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.), 20 ஓவர் போட்டி வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது. இதில் பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் இந்திய வீரர் தினேஷ் கார்த்திக் 108 இடங்கள் முன்னேறி 87-வது இடத்தை பிடித்துள்ளார்.
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 4-வது ஆட்டத்தில் 27 பந்துகளில் 55 ரன்கள் விளாசியதன் மூலம் இந்த ஏற்றம் கிடைத்துள்ளது. இஷான் கிஷன் ஒரு இடம் உயர்ந்து 6-வது இடத்தை பிடித்துள்ளார். டாப்-10 இடத்திற்குள் அங்கம் வகிக்கும் ஒரே இந்தியர் இவர் தான்.
இதில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் முதலிடத்தில் நீடிக்கிறார். மேலும் பந்து வீச்சாளர்களின் தரவரிசையில் ஆஸ்திரேலியாவின் ஹேசில்வுட் முதலிடத்திலும், இங்கிலாந்தின் அடில் ரஷித் 2-வது இடத்திலும் தொடர்கிறார்கள்.