< Back
கிரிக்கெட்
கிரிக்கெட்
கேப்டன் பதவியில் இருந்து விலக விரும்பும் கருணாரத்னே
|21 March 2023 4:07 AM IST
இலங்கை டெஸ்ட் அணியின் கேப்டன் 34 வயதான திமுத் கருணாரத்னே கேப்டன் பதவியில் இருந்து விலக முடிவு செய்துள்ளார்.
கொழும்பு,
இலங்கை டெஸ்ட் அணியின் கேப்டன் 34 வயதான திமுத் கருணாரத்னே கேப்டன் பதவியில் இருந்து விலக முடிவு செய்துள்ளார். அடுத்த மாதம் நடக்கும் அயர்லாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியுடன் கேப்டன் பதவியில் இருந்து விலக விரும்புவதாகவும், இது குறித்து தேர்வாளர்களிடம் பேசி இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
3-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் போது பாதியில் இன்னொருவரிடம் கேப்டன் பதவியை வழங்குவதை விட, தொடக்கத்திலேயே புதிய கேப்டனை நியமித்தால் நன்றாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். ஆனால் அவரது முடிவை இலங்கை கிரிக்கெட் வாரியம் இன்னும் ஏற்றுக் கொள்ள வில்லை.