திலாவர் உசேன், கவாஸ்கர் வரிசையில்.. 4-வது வீரராக சர்பராஸ் கான்
|இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியின் 2 இன்னிங்சிலும் சர்பராஸ் கான் அரைசதம் அடித்து அசத்தினார்.
ராஜ்கோட்,
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முடிவடைந்துள்ள 3 போட்டிகளின் முடிவில் இந்திய அணி தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி வரும் 23-ம் தேதி ராஞ்சியில் நடைபெற உள்ளது.
முன்னதாக ராஜ்கோட்டில் நடைபெற்ற 3-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் அறிமுக வீரராக இடம் பிடித்த சர்பராஸ் கான் இரு இன்னிங்சிலும் அரைசதம் (62 மற்றும் 68 ரன்) அடித்தார். இதன் மூலம் அவர் அறிமுகம் ஆன முதல் டெஸ்ட் போட்டியிலேயே இரு இன்னிங்சிலும் 50-க்கு மேற்பட்ட ரன்கள் அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் திலவார் உசேன், சுனில் கவாஸ்கர் வரிசையில் 4-வது வீரராக இடம்பிடித்து அசத்தியுள்ளார்.
அந்த பட்டியல்;-
1. திலவார் உசேன் - 59 & 57
2.சுனில் கவாஸ்கர் - 65 & 67
3.ஸ்ரேயாஸ் அய்யர் - 105 & 65
4. சர்பராஸ் கான் - 62 & 68