தோனியின் ஹாட்ரிக் சிக்சர்...சாரா டெண்டுல்கர் கொடுத்த ரியாக்ஷன்
|மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி 20 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மும்பை,
கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற்ற மும்பை அணிக்கு எதிரான 29-வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 206 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ருதுராஜ் 69 ரன்களும் ,துபே 66 ரன்களும் எடுத்தனர். மும்பை தரப்பில் ஹர்திக் பாண்ட்யா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதில் 19.2 ஓவரில் சென்னை அணி 186 ரன்கள் எடுத்திருந்த நிலையில் தோனி களம் இறங்கினார்.
அவர் அடுத்த 3 பந்துகளில் ஹாட்ரிக் சிக்சர் விளாசினார். இதனால் 20 ஓவர் முடிவில் சென்னை அணி 206 ரன்களை குவித்தது. இதுதான் ஆட்டத்தின் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. இதனையடுத்து விளையாடிய மும்பை அணி 186 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் சென்னை அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இளம் விக்கெட் கீப்பரான தோனி யின் அந்த கடைசி ஓவரின் ஹாட்ரிக் சிக்ஸ் எங்களுக்கு மிகப்பெரிய அளவில் உதவியது என்று சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் கூறியிருந்தார்.
இந்நிலையில், போட்டியின் போது தோனி ஹாட்ரிக் சிக்சர் அடித்தபோது இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகள் சாரா டெண்டுல்கர் கொடுத்த ரியாக்ஷன் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.