< Back
கிரிக்கெட்
தோனியை பேட்டிங் வரிசையில் மேலே இறக்க வேண்டும் - ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்

Image Courtesy: @ChennaiIPL

கிரிக்கெட்

தோனியை பேட்டிங் வரிசையில் மேலே இறக்க வேண்டும் - ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்

தினத்தந்தி
|
1 April 2024 12:16 PM IST

டெல்லி அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் தோனி 16 பந்தில் 37 ரன் எடுத்தார்.

விசாகப்பட்டினம்,

ஐ.பி.எல் தொடரின் 17வது சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின.

இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய டெல்லி அணி 20 ஒவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் எடுத்தது. டெல்லி தரப்பில் வார்னர் 52 ரன், பண்ட் 51 ரன் எடுத்தனர். இதையடுத்து 192 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 171 ரன் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 20 ரன் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் சென்னை அணியின் வெற்றிக்காக இறுதிக்கட்டத்தில் போராடிய தோனி அதிரடியாக ஆடி 16 பந்தில் 37 ரன் எடுத்தார். இதில் 4 போர் மற்றும் 3 சிக்ஸ் அடங்கும். இந்நிலையில், அதிரடியாக ஆடும் தோனி பேட்டிங் வரிசையில் மேலே வந்து அதிக பந்துகளை எதிர்கொண்டு அதிக ரன்கள் அடிக்க வேண்டும் என்று ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் பிரட் லீ கேட்டுக் கொண்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது, இன்றிரவு (நேற்று) அவர் துருப்பிடித்தது போல் விளையாடவில்லை. பேட்டிங்கை பொறுத்த வரை நான் அவரிடமிருந்து அதிகம் விரும்புகிறேன். அவர் சிறந்தவர். அவரது மூளை இன்னும் நன்றாகவும் கூர்மையாகவும் இருக்கிறது. எனவே சி.எஸ்.கே நிர்வாகம் எம்.எஸ் தோனியை பேட்டிங் வரிசையில் மேலே இறக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்