< Back
கிரிக்கெட்
தோனி ரசிகர்கள், நான் அவுட் ஆகனும்னு விரும்புறாங்க - ஜடேஜா ஜாலி பேச்சு!
கிரிக்கெட்

"தோனி ரசிகர்கள், நான் அவுட் ஆகனும்னு விரும்புறாங்க" - ஜடேஜா ஜாலி பேச்சு!

தினத்தந்தி
|
11 May 2023 9:13 AM IST

தோனி களம் இறங்க வேண்டும் என்பதற்காக, நான் அவுட் ஆக வேண்டும் என ரசிகர்கள் விரும்புவதாக ரவீந்திர ஜடேஜா கலகலப்பாக பேசி உள்ளார்.

சென்னை,

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் டெல்லிக்கு எதிராக நேற்று நடைபெற்ற போட்டியில் சென்னை அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இந்த போட்டியில் பேட்டிங்கில் 16 பந்துகளில் 21 ரன்களை எடுத்ததுடன், பந்துவீச்சில் 4 ஓவர்களில் 19 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து 1 விக்கெட் கைப்பற்றிய ஜடேஜாவுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

வெற்றிக்குப் பிறகு பேட்டியளித்த ஜடேஜா, முன்வரிசையில் பேட்டிங் செய்ய களமிறங்கினால், தோனியை வரச்சொல்லி ரசிகர்கள் கோஷம் எழுப்புவதாகக் கூறினார்.

கேப்டன் தோனி களமிறங்க வேண்டும் என்பதற்காக, தான் ஆட்டமிழக்க வேண்டும் என ரசிகர்கள் காத்திருப்பதாகப் பேசிய ஜடேஜா, அணி வெற்றி பெற்றால் மகிழ்ச்சி அடைவேன் எனக் கூறினார்.

மேலும் செய்திகள்