< Back
கிரிக்கெட்
தோனி அன்று இரவு கண்ணீர் விட்டு அழுதார் - ஹர்பஜன் சிங் பகிர்ந்த நிகழ்வு...!
கிரிக்கெட்

'தோனி அன்று இரவு கண்ணீர் விட்டு அழுதார்' - ஹர்பஜன் சிங் பகிர்ந்த நிகழ்வு...!

தினத்தந்தி
|
24 May 2023 8:19 AM IST

தோனி கண்ணீர் விட்டு அழுதார் என்று ஹர்பஜன் சிங் கூறினார்.

மும்பை,

ஐபிஎல் தொடரில் வெற்றிகரமான அணிகளில் ஒன்று சென்னை சூப்பர் கிங்ஸ். இதுவரை 14 ஐபிஎல் தொடர்களில் விளையாடி உள்ள சென்னை அணி அதில் 10 இறுதிபோட்டிகளில் ஆடி உள்ளது ( இந்த சீசன் ஐபிஎல் தொடரையும் சேர்த்து). அதில் 4 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.

சென்னை அணியின் கேப்டனாக ஐபிஎல் தொடரில் ஆரம்பித்த 2008ம் ஆண்டு முதல் இன்று வரை மிகச்சிறப்பாக செயல்பட்டு வருகிறார் என்.எஸ்.தோனி. அவரை கேப்டன் கூல் என்று ரசிகர்கள் அழைப்பர். மைதானத்தில் எவ்வளவு பெரிய சிக்கலான சமயத்திலும் அவர் கூலாக இருப்பதால் அவரை கேப்டன் கூல் என ரசிகர்கள் அழைக்கின்றனர்.

இந்நிலையில் கேப்டன் கூலான எம்.எஸ்.தோனி குறித்த ஒரு நிகழ்வை சிஎஸ்கே அணியின் முன்னாள் வீரரான ஹர்பஜன் சிங் பகிர்ந்துள்ளார். அதில் அவர்,

நான் பகிர்ந்து கொள்ள விரும்பும் ஒரு நிகழ்வு ஒன்று உள்ளது. 2 ஆண்டு தடைக்கு பின்னர் 2018ம் ஆண்டு சிஎஸ்கே மீண்டும் ஐபிஎல் தொடருக்கு திரும்பிய போது ஒரு இரவு அணியினருக்கு உணவு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஆண்கள் அழுவதில்லை என்ற பழமொழியை நான் கேள்வி பட்டிருக்கிறேன். ஆனால் அன்று இரவு எம்.எஸ்.தோனி அழுதார். அவர் மிகவும் உணர்ச்சிவசப்பட்டார். இதைப் பற்றி யாருக்கும் தெரியாது என நினைக்கிறேன். சரியா, இம்ரான் தாஹிர் என்றார்.

இதற்கு பதில் அளித்த இம்ரான்,

ஆம், நிச்சயமாக. அப்பொழுது நானும் அங்கு இருந்தேன். தோனிக்கு அது ஒரு உணர்ச்சிகரமான தருணம். அவரை அப்படி பார்க்கும் பொழுது இந்த அணி அவருக்கு எவ்வளவு நெருக்கமானது என்பதை நான் அறிந்தேன். அவர் அணியை தன் குடும்பமாக கருதுகிறார். இது எங்கள் அனைவருக்கும் மிகவும் உணர்ச்சிகரமானதாக இருந்தது.

நாங்கள் இரண்டு ஆண்டுகள் கழித்து திரும்பி வந்து கோப்பையை கைப்பற்றினோம். அப்பொழுது மக்கள் எங்கள் அணிக்கு புத்தே (வயதானவர்கள்) என பெயர் வைத்தனர். அந்த சீசனில் நானும் அணியில் இருந்தேன், நாங்கள் பட்டத்தை வென்றோம். அந்த வெற்றியால் நான் மிகவும் பெருமைப்படுகிறேன்.

இவ்வாறு இம்ரான் தாஹிர் கூறினார்.



மேலும் செய்திகள்