தவான் உள்ளே...சஹால் வெளியே...உலகக்கோப்பை தொடருக்கான அணியை தேர்வு செய்த இந்திய முன்னாள் வீரர்...!
|50 ஓவர் உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியை முன்னாள் வீரர் தேர்வு செய்துள்ளார்.
மும்பை,
இந்தியாவில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இந்திய அணி கடைசியாக 2011ம் ஆண்டு 50 ஓவர் உலகக்கோப்பையையும், 2013ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபியையும் வென்றிருந்தது.
இந்திய அணி ஐசிசி கோப்பையை வென்று 10 ஆண்டுகள் கடந்த நிலையில் அந்த நீண்ட கால சோகத்துக்கு முடிவு கட்ட இந்த உலகக்கோப்பையை கைப்பற்றும் முனைப்புடன் உள்ளது. இந்நிலையில் இந்த உலகக்கோப்பை தொடருக்கு எந்தெந்த வீரர்களை தேர்வு செய்ய வேண்டும் என பல முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாபர் உலகக்கோப்பை தொடருக்காக தான் தேர்வு செய்த அணியை அறிவித்துள்ளார். இந்த அணியில் அவர் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா, சுப்மன் கில், ஷிகர் தவான் ஆகியோரை தேர்வு செய்துள்ளார். மேலும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களாக விராட் கோலி, ஸ்ரேயஸ் அய்யர் ஆகியோரை தேர்வு செய்துள்ளார்.
விக்கெட் கீப்பராக கே.எல்.ராகுலும் அவருக்கு மாற்றாக சஞ்சு சாம்சனையும் தேர்வு செய்துள்ள அவர் ஆல் ரவுண்டர்களாக ஹர்த்திக் பாண்ட்யா, ஷர்துல் தாக்கூர், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல் ஆகியோரை தேர்வு செய்துள்ளார்.
பந்துவீச்சாளர்களாக குல்தீப் யாதவ், பும்ரா, சிராஜ், ஷமி ஆகியோரை தேர்வு செய்துள்ளார்.
உலகக்கோப்பைக்காக வாசிம் ஜாபர் தேர்வு செய்துள்ள அணி:
ரோகித் சர்மா, சுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேய்ஸ் அய்யர், கே.எல்.ராகுல், ஹர்த்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், ஜஸ்ப்ரீத் பும்ரா, ஷிகர் தவான், சஞ்சு சாம்சன், ஷர்துல் தாக்கூர், முகமது ஷமி.