< Back
கிரிக்கெட்
கிரிக்கெட்
சேப்பாக்கத்தில் நடைபெற்றுவரும் கிரிக்கெட் போட்டியில் பதாகைகளுக்கு அனுமதி மறுப்பு- ரசிகர்கள் அதிருப்தி
|27 Oct 2023 6:50 PM IST
சென்னையில் நடைபெற்றுவரும் பாகிஸ்தான்- தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியை காண ரசிகர்கள் ஆர்வம் காட்டினர்.
சென்னை,
நடப்பு உலகக்கோப்பை தொடரில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் கடைசி லீக் போட்டியில் பாகிஸ்தான் - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதி வருகின்றன. இந்த கிரிக்கெட் போட்டியை காண ரசிகர்கள் ஆர்வம் காட்டினர்.
குறிப்பாக, இந்த போட்டியை பார்ப்பதற்காக பாகிஸ்தான், ஜெர்மனி, தென் ஆப்ரிக்கா உட்பட பல்வேறு நாடுகளில் இருந்தும், இந்தியாவின் பல்வேறு நகரங்களில் இருந்தும் ஏராளமான ரசிகர்கள் சேப்பாக்கம் மைதானத்திற்கு வருகை புரிந்தனர். இந்த நிலையில், மைதானத்திற்குள் பதாகைகளை கொண்டுசெல்ல ரசிகர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால், ரசிகர்கள் அதிருப்தியடைந்தனர்.