< Back
கிரிக்கெட்
கிரிக்கெட்
கொல்கத்தா அணிக்கு எதிராக டாஸ் வென்ற டெல்லி பேட்டிங் தேர்வு
|29 April 2024 7:03 PM IST
ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெற உள்ள ஆட்டத்தில் கொல்கத்தா - டெல்லி அணிகள் விளையாடுகின்றன.
கொல்கத்தா,
10 அணிகள் கலந்து கொண்டுள்ள 17வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் 22-ம் தேதி தொடங்கிய இந்த தொடரில் இதுவரை 46 லீக் ஆட்டங்கள் முடிவடைந்துள்ளன.
இதனையடுத்து கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற உள்ள 47-வது லீக் ஆட்டத்தில் இன்று ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்சும் விளையாடுகின்றன.
இந்நிலையில் இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. அதில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் பேட்டிங் தேர்வு செய்துள்ளார். அதன்படி கொல்கத்தா அணி முதலில் பந்து வீச உள்ளது.