பெங்களூரு அணிக்கு எதிராக டாஸ் வென்ற டெல்லி பந்துவீச்சு தேர்வு
|டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் அக்சர் படேல் பந்துவீச்சை தேர்வு செய்தார்
பெங்களூரு,
17-வது ஐ.பி.எல். தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த தொடரில் இன்று இன்று இரவு பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெறும் 62வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் - டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதுகின்றன.
இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் அக்சர் படேல் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி ,பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது .
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு : பாப் டு பிளெசிஸ் (கேப்டன்), விராட் கோலி, வில் ஜாக்ஸ், ரஜத் படிதார், கேமரூன் கிரீன், மஹிபால் லோம்ரோர், தினேஷ் கார்த்திக் , கர்ண் ஷர்மா, முகமது சிராஜ், லாக்கி பெர்குசன், யாஷ் தயாள்.
டெல்லி கேப்பிடல்ஸ்: ஜேக் ப்ரேசர்-மெக்குர்க், அபிஷேக் போரல், ஷாய் ஹோப், குமார் குஷாக்ரா, டிரிஸ்டன் ஸ்டப்ஸ், அக்சர் படேல்(கேப்டன்), குல்தீப் யாதவ், ரசிக் தார் சலாம், முகேஷ் குமார், இஷாந்த் சர்மா, கலீல் அகமது.
பந்து வீச அதிக நேரம் எடுத்துக்கொண்ட புகாரில் சிக்கியதால் டெல்லி கேப்டன் ரிஷப் பண்டுக்கு ஒரு ஆட்டத்தில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர் இன்றைய ஆட்டத்தில் ஆடமுடியாது. அவருக்கு பதிலாக இந்த ஆட்டத்தில் ஆல்-ரவுண்டர் அக்ஷர் படேல் கேப்டன் பொறுப்பை கவனிக்கிறார்.