< Back
கிரிக்கெட்
லக்னோவுக்கு எதிராக டெல்லி வெற்றி: ராஜஸ்தான் அணிக்கு  அதிர்ஷ்டம்

image courtesy: PTI

கிரிக்கெட்

லக்னோவுக்கு எதிராக டெல்லி வெற்றி: ராஜஸ்தான் அணிக்கு அதிர்ஷ்டம்

தினத்தந்தி
|
15 May 2024 3:18 PM IST

ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் லக்னோ அணியை வீழ்த்தி டெல்லி வெற்றி பெற்றது.

புதுடெல்லி,

அனல் பறக்க நடந்து வரும் 17-வது ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற 64-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் டெல்லி அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

டெல்லி அணியின் இந்த வெற்றி ராஜஸ்தான் ராயல்சுக்கு அதிர்ஷ்டமாக அமைந்தது. அது என்னவெனில், நடப்பு சீசனில் 2-வது அணியாக ராஜஸ்தான் ராயல்ஸ் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. அந்த அணி 16 புள்ளிகள் பெற்றுள்ளது. மீதமுள்ள அணிகளில் சென்னை மற்றும் ஐதராபாத் மட்டுமே 16 புள்ளிகள் எடுக்கும் வாய்ப்பில் உள்ளன.

புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களில் உள்ள அணிகள் மட்டுமே பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியும் என்பதால், ராஜஸ்தான் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று அசத்தியுள்ளது. அந்த அணிக்கு இன்னும் 2 போட்டிகள் எஞ்சியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்