< Back
கிரிக்கெட்
டெல்லி அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் - பயிற்சியாளர் நம்பிக்கை

image courtesy:AFP

கிரிக்கெட்

டெல்லி அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் - பயிற்சியாளர் நம்பிக்கை

தினத்தந்தி
|
1 May 2024 3:11 AM IST

நேற்று முன்தினம் கொல்கத்தாவில் நடந்த ஆட்டத்தில் கொல்கத்தா அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்சை வீழ்த்தியது.

கொல்கத்தா,

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் கொல்கத்தாவில் நடந்த ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்சை வீழ்த்தியது. இதில் டெல்லி நிர்ணயித்த 154 ரன் இலக்கை கொல்கத்தா அணி 16.3 ஓவர்களில் எட்டிப்பிடித்தது.

11-வது லீக்கில் ஆடிய டெல்லிக்கு இது 6-வது தோல்வியாகும். இந்த தோல்விக்கு பின்னர் டெல்லி அணியின் பந்து வீச்சு பயிற்சியாளர் ஜேம்ஸ் ஹோப்ஸ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, எங்களுக்கு இனி ஒரு வாரம் ஓய்வு தான். இப்போது கூட இந்த போட்டியில் எங்களது தலைவிதி எங்கள் கையில் தான் உள்ளது என்று சொல்லலாம்.

அதாவது எஞ்சிய 3 ஆட்டங்களிலும் தொடர்ச்சியாக வெற்றி பெற்றால் 16 புள்ளிகள் கிடைக்கும். அதுவே பிளே-ஆப் சுற்றுக்கு போதுமானது தான். அதை செய்வோம் என்று நம்புகிறேன். ஓய்வு கிடைத்துள்ள இந்த வாரத்தில் எந்தெந்த விஷயங்களை சரி செய்வது என்பதில் கவனம் செலுத்துவோம். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்