< Back
கிரிக்கெட்
டெல்லி அணிக்கு எதிரான தோல்வி..! முகமது ஷமியிடம் மன்னிப்பு கேட்ட ஹர்திக் பாண்டியா
கிரிக்கெட்

டெல்லி அணிக்கு எதிரான தோல்வி..! முகமது ஷமியிடம் மன்னிப்பு கேட்ட ஹர்திக் பாண்டியா

தினத்தந்தி
|
3 May 2023 5:36 PM IST

டெல்லி அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.

16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடந்த 44-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணி, டெல்லி கேப்பிட்டல்சை எதிர்கொண்டது

.இப்போட்டியில் முதலில் பேட் செய்ய டெல்லி அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 130 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக அமன் ஹக்கீம் கான், 51 ரன்கள் எடுத்தார்.குஜராத் சார்பில் ஷமி 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

தொடர்ந்து 131 ரன்கள் இலக்கோடு குஜராத் அணி களமிறங்கிய நிலையில், அந்த அணியின் பேட்டர்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். அந்த அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா மட்டும் நிலைத்து நின்று ஆடி அரை சதம் அடித்தார்.கடைசி 12 பந்துகளில் குஜராத் அணிக்கு 30 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், நோர்கியா பந்துவீச்சில் ராகுல் தெவாட்டியா ஹாட்ரிக் சிக்சர்களை பறக்கவிட்டார்.இதனால் கடைசி ஒவரில் வெற்றிக்கு 12 ரன்கள் மட்டுமே தேவைப்பட்ட நிலையில் அந்த ஓவரை வீசிய இஷாந்த் சர்மா, 6 ரன்கள் மட்டுமே கொடுத்து தெவாட்டியா விக்கெட்டை கைப்பற்றினார். இதன்மூலம் டெல்லி அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்று அசத்தியுள்ளது.

இந்த நிலையில் போட்டிக்கு பின்னர் பேசிய குஜராத் கேப்டன் பாண்டியா கூறியதாவது ,

இந்த எளிய இலக்கை எந்த நாளாக இருந்தாலும் நாங்கள் வெற்றிகரமாக துரத்தி இருப்போம். முக்கியமான கட்டத்தில் விக்கெட்டுகளை இழந்து விட்டோம். ராகுல் திவேதியா அதிரடியாக விளையாடி எங்களை மீண்டும் ஆட்டத்திற்கு கொண்டு வந்தார். இதனை பயன்படுத்திக் கொண்டு அணியை வெற்றி பெற வைக்க வேண்டும் என நினைத்தேன். ஆனால் என்னால் அது முடியவில்லை.

மிடில் ஓவர்களில் மிகப்பெரிய ரன்னை குவிக்கலாம் என்று எதிர்பார்த்தோம். நான் கடுமையாக முயற்சித்தேன்இந்த தோல்விக்கு முழு பொறுப்பேற்கிறேன். டெல்லி அணியை நான் பாராட்டுகிறேன். அவர்கள் உண்மையிலேயே சிறப்பாக பந்துவீசி எங்களுக்கு நெருக்கடி கொடுத்தார்கள். ஆடுகளத்தை நான் குறை சொல்ல விரும்பவில்லை. ஏனென்றால் நாங்கள் இங்கு தான் பயிற்சி பெற்றோம். இந்த தோல்விக்காக முகமது சமியிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். அவருக்காக நான் நிச்சயம் வருந்துகிறேன். பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டார்கள். ஆனால் பேட்ஸ்மேன்கள் ஏமாற்றத்தை அளித்துவிட்டனர். முகமது சமி தனது திறமையான பந்துவீச்சால் எதிர் அணியை திணறடித்து விட்டார். இன்னும் போட்டிகள் இருக்கிறது. இந்த போட்டி மூலம் நாங்கள் பல விஷயங்களை கற்றோம். நல்ல கிரிக்கெட்டை வெளிப்படுத்துவது அவசியமானது. இவ்வாறு ஹர்திக் பாண்டயா கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்