< Back
கிரிக்கெட்
கிரிக்கெட்
தீப்தி சர்மா செய்தது சரியே..! கிரிக்கெட் விதிகளை வகுக்கும் எம்.சி.சி ஆதரவு
|26 Sept 2022 6:25 PM IST
இங்கிலாந்து வீராங்கனை சார்லெட்டை தீப்தி சர்மா மன்கட் முறையில் ஆட்டமிழக்கச் செய்தது பேசுபொருளானது.
லண்டன்,
இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய வீராங்கனை தீப்தி சர்மா செய்த ரன்-அவுட் கிரிக்கெட் விதிகளின்படி சரியானது என எம்.சி.சி. தெரிவித்து உள்ளது.
இங்கிலாந்து வீராங்கனை சார்லெட்டை தீப்தி சர்மா மன்கட் முறையில் ஆட்டமிழக்கச் செய்தது பேசுபொருளானது. இந்நிலையில், இந்த ரன் அவுட் தொடர்பாக கிரிக்கெட் விதிகளை வகுக்கும் அமைப்பான மேர்லிபோன் கிரிக்கெட் கிளப் அறிக்கை வெளியிட்டு உள்ளது.
அதில் விதி எண் 38ன் படி தீப்தி சர்மா செய்த ரன்-அவுட் சரியானதுதான் என எம்.சி.சி கூறி உள்ளது.