100 டெஸ்ட் போட்டிகள் விளையாடி டேவிட் வார்னர் சாதனை
|ஆஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் தனது 100-வது டெஸ்ட்டில் களமிறங்கினார்.
மெல்போர்ன்,
ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் 100-வது டெஸ்ட்டில் களமிறங்கியுள்ளார். எந்தவொரு கிரிக்கெட் வீரருக்கும் டெஸ்ட் கிரிகெட்டில் 100 போட்டிகள் என்பது மிகப்பெரிய சாதனையாக அமையும். இதுவரை வெகுசிலரே அந்த மைல்கல்லை எட்டியுள்ளனர்.
இந்நிலையில் இன்று தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடக்கும் பாக்ஸிங் டே போட்டியில் டேவிட் வார்னர் இந்த சாதனையை நிகழ்த்தி உள்ளார். முதல் இன்னிங்சில் தென் ஆப்பிரிக்கா அணி 189 ரன்னில் ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலியா தரப்பில் கிரீன் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கி ஆஸ்திரேலியா அணி 1 விக்கெட் இழப்பிற்கு 41 ரன்கள் எடுத்துள்ளது. தொடக்க வீரர் வார்னர் 32 ரன்னில் களத்தில் உள்ளார். இதுவரை 99 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 7922 ரன்கள் சேர்த்துள்ளார். இதில் 24 சதங்கள் அடங்கும்