< Back
கிரிக்கெட்
பிபிஎல் போட்டியில் பங்கேற்க ஹாலிவுட்  ஹீரோபோல ஹெலிகாப்டரில் என்ட்ரி  கொடுத்த டேவிட் வார்னர்

image courtesy; PTI

கிரிக்கெட்

பிபிஎல் போட்டியில் பங்கேற்க ஹாலிவுட் ஹீரோபோல ஹெலிகாப்டரில் என்ட்ரி கொடுத்த டேவிட் வார்னர்

தினத்தந்தி
|
12 Jan 2024 1:24 PM IST

டேவிட் வார்னர் பிபிஎல் தொடரில் சிட்னி தண்டர் அணிக்காக விளையாடி வருகிறார்.

சிட்னி,

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் அதிரடி தொடக்க ஆட்டக்காரரான டேவிட் வார்னர், கடந்த 6-ம் தேதி சர்வதேச டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். இருப்பினும் டி20 போட்டிகளில் தொடர்ந்து விளையாடுகிறார்.

இவர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பிபிஎல் தொடரில் சிட்னி தண்டர் அணிக்காக விளையாடி வருகிறார். இந்த தொடரில் எஸ்சிஜி மைதானத்தில் இன்று நடைபெற உள்ள லீக் ஆட்டத்தில் சிட்னி தண்டர்ஸ் - சிட்னி சிக்சர்ஸ் அணிகள் மோத உள்ளன.

இந்நிலையில் இந்த ஆட்டத்தில் பங்கேற்பதற்காக டேவிட் வார்னர் ஹாலிவுட் படங்களில் ஹீரோ வருவதைபோல் ஹெலிகாப்டரில் என்ட்ரி கொடுத்துள்ளார்.

ஆஸ்திரேலியாவில் உள்ள ஹண்டர் பள்ளத்தாக்கில் நடந்த தனது சகோதரரின் திருமணத்தில் வார்னர் கலந்துகொண்டுள்ளார். பின்னர் அங்கிருந்து நேரடியாக இந்த போட்டியில் பங்கேற்பதற்காக திட்டமிட்ட அவர் காரில் சென்றால் தாமதமாகும் என கருதி ஹெலிகாப்டரில் வந்துள்ளார். இதுதான் வார்னரின் இந்த தனித்துவமான நுழைவுக்குக் காரணம் என கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்