< Back
கிரிக்கெட்
சி.எஸ்.கே.வுக்கு எதிராக தோல்வியடைய இதுதான் காரணம் - ஆர்.சி.பி. கேப்டன் பேட்டி

image courtesy: twitter/@RCBTweets

கிரிக்கெட்

சி.எஸ்.கே.வுக்கு எதிராக தோல்வியடைய இதுதான் காரணம் - ஆர்.சி.பி. கேப்டன் பேட்டி

தினத்தந்தி
|
23 March 2024 8:32 AM IST

நடப்பு ஐ.பி.எல். தொடரின் முதலாவது போட்டியில் பெங்களூரு அணியை வீழ்த்தி சி.எஸ்.கே. வெற்றி பெற்றது.

சென்னை,

17-வது ஐ.பி.எல். சீசன் நேற்று கோலாகலமாக தொடங்கியது. இதன் முதலாவது போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் (சி.எஸ்.கே) - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்.சி.பி) அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் பெங்களூருவை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை அணி வெற்றி பெற்றது.

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் பெற்ற தோல்வி குறித்து பேசிய ஆர்.சி.பி அணியின் கேப்டன் பாப் டு பிளிஸ்சிஸ் அளித்த பேட்டியில் :

'எப்பொழுதுமே பவர்பிளே முடிந்து மிடில் ஓவர்களில் விளையாடுவது சற்று கடினமான ஒரு விசயம். அதிலும் சென்னை போன்ற ஒரு பலமான அணிக்கு எதிராக விளையாடும்போது மிடில் ஓவர்களில் ஜாக்கிரதையாக விளையாட வேண்டும். ஆனால் நாங்கள் இந்த போட்டியின்போது மிடில் ஓவர்களில் நிறையவே விக்கெட்டுகளை இழந்தது மட்டுமின்றி 15 முதல் 20 ரன்கள் வரை குறைவாக எடுத்து விட்டோம். இந்த மைதானத்தில் முதல் 10 ஓவர்கள் வரை பேட்டிங் செய்ய எளிதாகவே இருந்தது.

ஆனாலும் அடுத்தடுத்த விக்கெட்டுகளை நாங்கள் இழந்ததன் காரணமாக ரன் வேகம் குறைந்தது. இருப்பினும் பின் வரிசையில் அனுஜ் ராவத் மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டனர். அதிலும் குறிப்பாக அனுஜ் ராவத் ஒரு திறமையான வீரர் என்பதை இந்த போட்டியில் பலமாக வெளிக்காட்டி இருக்கிறார். இந்த போட்டியில் மிடில் ஓவர்களில் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்ததும் ரன்கள் குறைவாக குவித்ததுமே தோல்விக்கு காரணம்' என்று கூறினார்.

மேலும் செய்திகள்