< Back
கிரிக்கெட்
சென்னையில் நடைபெறும் சி.எஸ்.கே. போட்டிகளுக்கான டிக்கெட் ஆன்லைனில் மட்டுமே விற்பனை
கிரிக்கெட்

சென்னையில் நடைபெறும் சி.எஸ்.கே. போட்டிகளுக்கான டிக்கெட் ஆன்லைனில் மட்டுமே விற்பனை

தினத்தந்தி
|
11 March 2024 5:02 PM IST

22-ம் தேதி தொடங்கும் ஐ.பி.எல். தொடர் முதல் போட்டியில் சென்னை - பெங்களூரு அணிகள் மோதுகின்றன.

சென்னை,

இந்தியாவில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் ஐ.பி.எல். தொடரின் 17-ஆவது சீசன் வரும் 22-ம் தேதி தொடங்க உள்ளது. இந்த தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்த உள்ளன.

ஐ.பி.எல். தொடருக்காக அனைத்து அணிகளும் தற்போது தங்களது வீரர்களை ஒன்றிணைத்து தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர்கள் சேப்பாக்கம் மைதானத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடும் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை முழுவதும் ஆன்லைன் மூலம் மட்டுமே நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. டிக்கெட் விற்பனைக்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு நேரடியாக டிக்கெட் வாங்கி கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்க்கப்படுவதாக புகார் எழுந்ததையடுத்து இந்த முடிவு எடுக்கபட்டுள்ளது.

மேலும் செய்திகள்