< Back
கிரிக்கெட்
விஜய்யின் லியோ பட பாணியில் எம்.எஸ்.தோனிக்கு அறிமுக வீடியோ வெளியிட்ட சி.எஸ்.கே
கிரிக்கெட்

விஜய்யின் 'லியோ' பட பாணியில் எம்.எஸ்.தோனிக்கு அறிமுக வீடியோ வெளியிட்ட சி.எஸ்.கே

தினத்தந்தி
|
6 March 2024 6:05 PM IST

ஐ.பி.எல். தொடருக்காக தோனி சென்னை வந்ததை தொடர்ந்து, அவருக்காக அறிமுக வீடியோ ஒன்றை சி.எஸ்.கே. வெளியிட்டுள்ளது.

சென்னை,

இந்தியாவில் கடந்த 2008-ம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரானது இதுவரை 16 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. இதன் 17-வது சீசன் இந்த ஆண்டு நடைபெற உள்ளது. இந்த தொடரில் 10 அணிகள் கலந்து கொள்ள உள்ளன.

இதுவரை நடந்து முடிந்துள்ள ஐ.பி.எல் தொடர்களில் அதிகபட்சமாக சென்னை மற்றும் மும்பை அணிகள் தலா 5 முறை கோப்பைகளை வென்றுள்ளன. அதன்படி, நடப்பு ஆண்டுக்கான ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் வரும் 22ம் தேதி ஆரம்பமாகிறது. முதல் போட்டியில் சென்னை-பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன. சென்னையில் இந்த போட்டியானது இரவு 8 மணிக்கு நடைபெற உள்ளது.

ஐ.பி.எல். தொடரில் விளையாடுவதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனி நேற்று சென்னை வந்தடைந்தார். இந்நிலையில், சென்னை வந்த தோனியை கவுரவிக்கும் விதமாக சி.எஸ்.கே . நிர்வாகம் ஒரு வீடியோவை தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளது.

அதில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான லியோ படத்தில், போட்டோ பிரேமை அர்ஜூன் சுத்தியலால் அடித்து உடைத்து, விஜய் அறிமுகமாகும் காட்சி அமைக்கப்பட்டு இருந்தது. அதைப்போல, போட்டோ பிரேமை சுத்தியலால் உடைத்து அதில் தோனி முகம் இருப்பது போன்ற அறிமுக வீடியோவை சி.எஸ்.கே வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவை ரசிகர்கள் பகிர்ந்து வைரலாக்கி வருகின்றனர்.

மேலும் செய்திகள்