உலகக்கோப்பை கிரிக்கெட்: டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்து வீச முடிவு
|உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்து வீச முடிவு செய்துள்ளது.
பெங்களூரு,
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கும் 18-வது லீக்கில் ஆஸ்திரேலிய அணி, பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.
5 முறை சாம்பியனான ஆஸ்திரேலியா தனது முதல் இரு ஆட்டங்களில் முறையே இந்தியா, தென்ஆப்பிரிக்காவிடம் உதை வாங்கியது. முந்தைய ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி முதல் வெற்றியை பெற்றது.
பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி முதல் 3 ஆட்டங்களில் 2-ல் வெற்றியும் (நெதர்லாந்து, இலங்கைக்கு எதிராக) ஒன்றில் தோல்வியும் (இந்தியாவுக்கு எதிராக) கண்டுள்ளது. இந்தியாவுக்கு எதிராக 191 ரன்னில் சுருண்டு படுதோல்வி அடைந்த பாகிஸ்தான் அதில் இருந்து மீள்வதற்கான முனைப்புடன் ஆயத்தமாகிறது.
இரு அணிகளும் ஏறக்குறைய சரிசம பலத்துடன் மோதுவதால் களத்தில் அனல் பறக்கும் என்று நம்பலாம்.
இந்நிலையில் இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்து வீச முடிவு செய்துள்ளது. அதன்படி ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் செய்யவுள்ளது.
இரு அணிகளுக்கான பிளேயிங் 11 பின்வருமாறு;-
ஆஸ்திரேலிய பிளேயிங் 11: டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், ஸ்டீவன் ஸ்மித், மார்னஸ் லாபுசாக்னே, ஜோஷ் இங்கிலிஸ்(கீப்பர்), கிளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோனிஸ், பாட் கம்மின்ஸ்(கேப்டன்), மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஜம்பா, ஜோஷ் ஹேசில்வுட்
பாக்கிஸ்தான் பிளேயிங் 11: அப்துல்லா ஷபீக், இமாம்-உல்-ஹக், பாபர் அசாம்(கேப்டன்), முகமது ரிஸ்வான்(கீப்பர்), சவுத் ஷகீல், இப்திகார் அகமது, முகமது நவாஸ், உசாமா மிர், ஹசன் அலி, ஷாஹீன் அப்ரிடி, ஹாரிஸ் ரவுஃப்