< Back
கிரிக்கெட்
உலகக் கோப்பை கிரிக்கெட்: ஆமதாபாத்தில் நாளை கோலாகல தொடக்க விழா
கிரிக்கெட்

உலகக் கோப்பை கிரிக்கெட்: ஆமதாபாத்தில் நாளை கோலாகல தொடக்க விழா

தினத்தந்தி
|
3 Oct 2023 3:48 AM IST

ஆமதாபாத்தில் பிரமாண்டமான தொடக்க விழாவுக்கு இந்திய கிரிக்கெட் வாரியமும், ஐ.சி.சி.யும் ஏற்பாடு செய்துள்ளது.

ஆமதாபாத்,

13-வது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நாளை மறுதினம் தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து- நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.

அதற்கு முன்பாக நாளை (புதன்கிழமை) இரவு 7 மணிக்கு ஆமதாபாத்தில் பிரமாண்டமான தொடக்க விழாவுக்கு இந்திய கிரிக்கெட் வாரியமும், ஐ.சி.சி.யும் ஏற்பாடு செய்துள்ளது. இதில் லேஷர் ஷோ, வாணவேடிக்கை மற்றும் பாலிவுட் நட்சத்திரங்களின் கண்கவர் கலைநிகழ்ச்சி இடம் பெறுகிறது.

இந்தி நடிகர் ரன்வீர் சிங், நடிகை தமன்னா நடனமாடுகிறார்கள். ஆஷா போஸ்லே, ஸ்ரேயா கோஷல், அரிஜிங்சிங், சங்கர் மகாதேவன் உள்ளிட்டோர் இசை வெள்ளத்துக்கு மத்தியில் பாடல்கள் பாடி ரசிகர்களை குதூகலப்படுத்த உள்ளனர். மேலும் விழாவின் முக்கிய அம்சமாக 10 அணிகளின் கேப்டன்கள் அறிமுக நிகழ்ச்சியும் இடம் பெறுகிறது.

தொடக்க போட்டிக்கான டிக்கெட் எடுத்துள்ள ரசிகர்கள் தொடக்க விழாவை காண அனுமதிக்கப்படுவார்கள். கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள், ஐ.சி.சி. நிர்வாகிகள், முன்னாள் வீரர்கள் கலந்து கொள்கிறார்கள்.

மேலும் செய்திகள்