< Back
கிரிக்கெட்
கிரிக்கெட்
உலகக்கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற நெதர்லாந்து பந்துவீச்சு தேர்வு
|6 Oct 2023 2:06 PM IST
பாகிஸ்தானுக்கு எதிரான உலகக்கோப்பை லீக் ஆட்டத்தில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது.
ஐதராபாத்,
ஐசிசி நடத்தும் ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடர் இந்தியாவில் நேற்றுமுதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி நியூசிலாந்து அணி அபார வெற்றி பெற்றது.
இந்த நிலையில், இன்று நடைபெற்றுவரும் 2வது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் -நெதர்லாந்து அணிகள் மோதி வருகின்றன. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி, பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.