உலகக்கோப்பை கிரிக்கெட்: டாஸ் வென்ற நெதர்லாந்து அணி பேட்டிங் செய்ய முடிவு
|உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இன்றய ஆட்டத்தில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது.
லக்னோ,
உலகக்கோப்பை கிரிக்கெட்டில் லக்னோவில் இன்று நடக்கும் 19-வது லீக்கில் ஸ்காட் எட்வர்ட்ஸ் தலைமையிலான நெதர்லாந்து அணி, குசல் மென்டிஸ் தலைமையிலான இலங்கை அணியுடன் மோதுகிறது.
முன்னாள் சாம்பியனான இலங்கை நடப்பு தொடரில் வெற்றி கணக்கை தொடங்காத ஒரே அணியாக கடைசி இடத்தில் தத்தளிக்கிறது. இலங்கை அணி தனது முதல் 3 ஆட்டங்களில் தென்ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா ஆகிய அணிகளிடம் உதை வாங்கியது. முதல் 2 ஆட்டங்களில் இலங்கை அணி 320 ரன்களுக்கு மேல் குவித்தாலும், அந்த அணியின் பவுலர்கள் ஒருசேர சொதப்பியதால் பாதகமாக அமைந்தது.
நெதர்லாந்து அணி தனது முதல் 2 ஆட்டங்களில் முறையே 81 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானிடமும், 99 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்திடமும் பணிந்தது. ஆனால் கடந்த ஆட்டத்தில் 38 ரன்கள் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்காவுக்கு அதிர்ச்சி அளித்தது. உலகக் கோப்பை தொடரில் டெஸ்ட் அந்தஸ்து பெற்ற அணிக்கு எதிராக பெற்ற இந்த முதல் வெற்றியின் மூலம் நெதர்லாந்து அணியின் நம்பிக்கை நிச்சயம் அதிகரித்து இருக்கும்.
இந்நிலையில் இந்த ஆட்டத்துக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. அதன் படி இலங்கை அணி முதலில் பந்து வீச உள்ளது.
இரு அணிகளுக்கான பிளேயிங் 11 பின்வருமாறு;-
இலங்கை அணி பிளேயிங் 11:பதும் நிஸ்ஸங்க, குசல் பெரேரா, குசல் மெண்டிஸ்(w/c), சதீர சமரவிக்ரம, சரித் அசலங்க, தனஞ்சய டி சில்வா, துஷான் ஹேமந்த, சாமிக்க கருணாரத்ன, மஹீஸ் தீக்ஷன, கசுன் ராஜித, டில்ஷான் மதுஷங்க
நெதர்லாந்து அணி பிளேயிங் 11:விக்ரம்ஜித் சிங், மேக்ஸ் ஓடோவ்ட், கொலின் அக்கர்மேன், பாஸ் டி லீட், சைப்ராண்ட் ஏங்கல்பிரெக்ட், தேஜா நிடமனுரு, ஸ்காட் எட்வர்ட்ஸ்(w/c), லோகன் வான் பீக், ரோலோஃப் வான் டெர் மெர்வே, ஆர்யன் தத், பால் வான் மீகெரென்