உலகக்கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சு தேர்வு
|உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இன்று நடைபெறும் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வுசெய்துள்ளது.
ஆமதாபாத்,
உலகக் கோப்பையில் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கும் இந்தியா- பாகிஸ்தான் இடையிலான லீக் ஆட்டம் குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.
உலகக்கோப்பை வரலாற்றில் இதுவரை இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதிய 7 ஆட்டங்களிலும் இந்தியாவே வென்றுள்ளது. இந்திய அணியின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்து உலகக்கோப்பை ஆட்டத்தில் முதல்முறையாக இந்திய அணியை வீழ்த்தவேண்டும் என்ற முனைப்புடன் பாகிஸ்தான் அணி உள்ளது. அதேசமயம், 8-வது முறையாக பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றிபெற இந்திய வீரர்கள் ஆயத்தமாக உள்ளனர்.
இந்த நிலையில், இந்த ஆட்டத்துக்கான டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வுசெய்துள்ளார். அதன்படி, பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.
டெங்கு காய்ச்சல் காரணமாக கடந்த இரண்டு ஆட்டங்களை தவறவிட்ட இந்திய அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் சுப்மன் கில், இந்த ஆட்டத்தில் களமிறங்குகிறார்.
இரு அணி வீரர்கள் விவரம்:-
இந்தியா:
ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயாஷ் அய்யர், கேஎல் ராகுல், ஹர்திக் பாண்ட்யா, ஜடேஜா, ஷர்துல் தாகூர், குல்தீப், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்.
பாகிஸ்தான்:
அப்துல்லா ஷபிக், இமாம் உல்-ஹக், பாபர் அசாம் (கேப்டன்), முகமது ரிஸ்வான், சாத் ஷகீல், இப்திகர் அகமது, ஷதப் கான், முகமது நவாஸ், ஹரிஸ் ரால்ப், ஷகீன் ஷா அப்ரிடி, ஹசன் அலி.