< Back
கிரிக்கெட்
கிரிக்கெட்
உலகக்கோப்பை கிரிக்கெட்: ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது வங்காளதேசம்
|7 Oct 2023 5:15 PM IST
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆப்கானிஸ்தான் அணியை வங்காளதேச அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
தர்மசாலா,
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 3-வது லீக் ஆட்டத்தில் வங்காளதேசம் அணியும் ஆப்கானிஸ்தான் அணியும் மோதின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற வங்காளதேச அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட்டிங்கை தொடங்கிய ஆப்கானிஸ்தான் 37.2 ஓவர்களில் 10 விக்கெட்டுகளையும் இழந்து 156 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதையடுத்து, 157 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் பேட்டிங்கை துவங்கிய வங்காளதேச அணி 34.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்து வெற்றி இலக்கை எட்டியது. இதன் மூலம் 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வங்காளதேச அணி வெற்றி பெற்றது.