< Back
கிரிக்கெட்
கிரிக்கெட்
உலகக்கோப்பை கிரிக்கெட்: இலங்கைக்கு எதிராக டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்துவீச்சு தேர்வு
|30 Oct 2023 2:06 PM IST
உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் -இலங்கை அணிகள் மோதி வருகின்றன.
புனே,
ஐசிசி நடத்தும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் -இலங்கை அணிகள் மோதுகின்றன.
இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வுசெய்துள்ளது. அதன்படி, இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.
இரு நாட்டு அணி வீரர்கள் விவரம்:
ஆப்கானிஸ்தான்; ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராஹிம் சத்ரான், ரஹ்மத் ஷா, ஹஷ்மத்துல்லா ஷாஹிதி (கே), அஸ்மத்துல்லா உமர்சாய், இக்ரம் அலிகில் முகமது நபி, ரஷீத் கான், முஜீப் உர் ரஹ்மான், நவீன் உல் ஹக், பசல்ஹா
இலங்கை; பதும் நிஸ்ஸங்க, திமுத் கருணாரத்ன, குசல் மெண்டிஸ் (கே), சதீர சமரவிக்ரம, சரித் அசலங்கா, தனஞ்சய டி சில்வா, ஏஞ்சலோ மேத்யூஸ், மஹீஷ் தீக்ஷனா, கசுன் ராஜித, துஷ்மந்த சமீர, டில்ஷான் மதுஷங்க.