< Back
கிரிக்கெட்
2028-ம் ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக் தொடரில் கிரிக்கெட் சேர்ப்பு - ரசிகர்கள் மகிழ்ச்சி...!
கிரிக்கெட்

2028-ம் ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக் தொடரில் கிரிக்கெட் சேர்ப்பு - ரசிகர்கள் மகிழ்ச்சி...!

தினத்தந்தி
|
13 Oct 2023 4:28 PM IST

2028-ம் ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் தொடரில் கிரிக்கெட் போட்டி சேர்க்கப்பட உள்ளது.

சென்னை,

உலகின் மிகப்பெரிய விளையாட்டு போட்டியான ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை சேர்க்க வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கையாக இருந்தது. கடைசியாக 1900-ம் ஆண்டு ஒலிம்பிக்கில் மட்டும் கிரிக்கெட் இடம் பிடித்தது. அதன் பிறகு கழற்றிவிடப்பட்ட கிரிக்கெட்டை கொண்டு வர எடுக்கப்பட்ட நூற்றாண்டு கால முயற்சிக்கு ஒரு வழியாக வெற்றி கிடைத்துள்ளது.

அதாவது, 2028-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி அமெரிக்காவின் லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் நடக்கிறது. இந்த ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை சேர்க்க பரிந்துரைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் 2028ம் ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக் தொடரில் கிரிக்கெட் சேர்க்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கிரிக்கெட் போட்டியுடன் சேர்த்து ஸ்குவாஷ் உள்ளிட்ட போட்டிகளும் சேர்க்கப்பட உள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் செய்திகள்