< Back
கிரிக்கெட்
கிரிக்கெட்
"தோனி மைதானத்திற்குள் வருவதை கிரிக்கெட் ரசிகர்கள் ஒருமுறையாவது நேரில் காணவேண்டும்".. ஆரோன் பின்ச் சொல்கிறார்
|7 May 2023 10:45 PM IST
அனைத்து கிரிக்கெட் ரசிகர்களும் தோனி களமிறங்குவதை நேரில் காண வேண்டும் என ஆஸ்திரேலிய வீரர் ஆரோன் பின்ச் கூறியுள்ளார்.
சென்னை,
கிரிக்கெட் ரசிகர்கள் ஒருமுறையாவது தோனி களத்திற்கு வருவதை நேரில் கண்டுகளித்துவிட வேண்டும் என ஆஸ்திரேலியா முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆரோன் பின்ச் வேண்டுகோள் விடுத்து உள்ளார்.
தோனியைப் பாராட்டிப் பேசிய பின்ச், தோனி மைதானத்திற்குள் களமிறங்குவதை அனைத்து கிரிக்கெட் ரசிகர்களும் ஒருமுறையாவது பார்த்துவிட வேண்டும் என்றும், அது ஆகச்சிறந்த அனுபவம் என்றும் தெரிவித்து உள்ளார்.