< Back
கிரிக்கெட்
சிபிஎல் 20 ஓவர் கிரிக்கெட்: ஜமைக்கா அணி சாம்பியன்

Image Courtesy: CPL T20

கிரிக்கெட்

சிபிஎல் 20 ஓவர் கிரிக்கெட்: ஜமைக்கா அணி 'சாம்பியன்'

தினத்தந்தி
|
2 Oct 2022 1:54 AM IST

சிபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் ஜமைக்கா அணி வெற்றி பெற்று 3-வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

கயானா,

10-வது கரிபியன் பிரிமீயர் லீக் (சி.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வெஸ்ட்இண்டீசில் நடந்தது. இதில் கயானாவில் நேற்று முன்தினம் இரவு நடந்த இறுதி ஆட்டத்தில் பார்படோஸ் ராயல்ஸ்-ஜமைக்கா டல்லாவாஸ் அணிகள் மோதின. 'டாஸ்' ஜெயித்து முதலில் பேட் செய்த பார்படோஸ் ராயல்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 161 ரன்கள் எடுத்தது.

இதனையடுத்து ஆடிய ஜமைக்கா அணி 16.1 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 3-வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. தொடக்க ஆட்டக்காரர் பிரன்டன் கிங் 83 ரன்களுடனும் (50 பந்து, 13 பவுண்டரி, 2 சிக்சர்), கேப்டன் ரோவ்மன் பவெல் 14 ரன்களுடனும் (13 பந்து, ஒரு சிக்சர்) ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

மேலும் செய்திகள்