< Back
கிரிக்கெட்
கிரிக்கெட்
கவுண்டி கிரிக்கெட்; சஸ்செக்ஸ் அணியில் இணைந்த ஜெய்தேவ் உனத்கட்...!
|18 Aug 2023 9:34 AM IST
இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜெய்தேவ் உனத்கட் இங்கிலாந்து கவுண்டி போட்டியில் சஸ்செக்ஸ் அணிக்காக விளையாடவுள்ளார்.
லண்டன்,
இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜெய்தேவ் உனத்கட். இவர் இந்திய அணியில் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான தொடரில் இடம் பெற்றிருந்தார். அதில் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் களம் இறங்கிய உனத்கட் விக்கெட் எதுவும் வீழ்த்தவில்லை.
இந்நிலையில் அவர் இங்கிலாந்தில் நடைபெற்று வரும் கவுண்டி கிரிக்கெட்டில் சஸ்செக்ஸ் அணிக்காக ஆட ஒப்பந்தமாகி உள்ளார்.
சஸ்செக்ஸ் அணிக்காக இந்திய பேட்ஸ்மேன் புஜாரா விளையாடி வரும் நிலையில் தற்போது இடக்கை வேகப்பந்து வீச்சாளர் ஜெய்தேவ் உனத்கட்டும் இணைந்துள்ளார். புஜாராவும் ஜெய்தேவ் உனத்கட்டும் முதல் தர கிரிக்கெட்டில் சவுராஷ்டிரா அணிக்காக ஒன்றாக விளையாடிவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.