< Back
கிரிக்கெட்
கிரிக்கெட்
ஆஸ்திரேலிய பவுலர் ஆடம் ஜம்பாவுக்கு கொரோனா
|26 Oct 2022 4:30 AM IST
ஆடம் ஜம்பா லேசான அறிகுறியுடன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பது நேற்று தெரிய வந்தது.
பெர்த்,
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில் இடம் பெற்றுள்ள முன்னணி சுழற்பந்து வீச்சாளர் ஆடம் ஜம்பா லேசான அறிகுறியுடன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பது நேற்று தெரிய வந்தது. போட்டிக்கான வழிகாட்டுதல்படி, கொரோனா தொற்றுடன் ஒரு வீரர் களம் இறங்க அனுமதி உண்டு.
அணியினருடன் செல்லாமல் தனியாக பயணிக்க வேண்டும். ஆனால் இலங்கைக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் அவர் சேர்க்கப்படவில்லை. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஓய்வு அளிக்கப்பட்டது. அவருக்கு பதிலாக மற்றொரு சுழற்பந்து வீச்சாளர் ஆஷ்டன் அகர் வாய்ப்பு பெற்றார்.