ஆஸ்திரேலிய அதிரடி ஆட்டக்காரருக்கு கொரோனா...வெஸ்ட் இண்டீஸ்-க்கு எதிரான 2வது டெஸ்டில் பங்கேற்பதில் சிக்கல்
|ஆஸ்திரேலியா- வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 2வது டெஸ்ட் போட்டி வரும் 25ம் தேதி தொடங்குகிறது.
பிரிஸ்பேன்,
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலாவதாக நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரில் ஒரு போட்டி முடிந்துள்ள நிலையில் அதில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என ஆஸ்திரேலியா முன்னிலையில் உள்ளது.
இதையடுத்து இவ்விரு அணிகளுக்கும் இடையிலான 2வது டெஸ்ட் போட்டி வரும் 25ம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில் இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவின் அதிரடி ஆட்டக்காரரான டிராவிஸ் ஹெட் பங்கேற்பதில் சிக்கல் எழுந்துள்ளது. டிராவிஸ் ஹெட்டுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதன் காரணமாக வெஸ்ட் இண்டீஸூக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் ஹெட் பங்கேற்பதில் சிக்கல் எழுந்துள்ளது. முதல் டெஸ்ட் போட்டியில் ஹெட் சதம் (119 ரன்) அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.