< Back
கிரிக்கெட்
நடப்பு ஐ.பி.எல்.தொடரிலிருந்து கான்வே விலகல்.... இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் சி.எஸ்.கே.அணியில் சேர்ப்பு

image courtesy: PTI

கிரிக்கெட்

நடப்பு ஐ.பி.எல்.தொடரிலிருந்து கான்வே விலகல்.... இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் சி.எஸ்.கே.அணியில் சேர்ப்பு

தினத்தந்தி
|
18 April 2024 3:18 PM IST

காயம் காரணமாக நடப்பு ஐ.பி.எல். தொடரிலிருந்து சி.எஸ்.கே. வீரர் கான்வே விலகியுள்ளார்.

சென்னை,

இந்தியாவில் நடைபெற்று வரும் ஐ.பி.எல். தொடரின் 17-வது சீசனில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 போட்டிகளில் விளையாடி 4 வெற்றிகளுடன் புள்ளி பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளது.

ஐ.பி.எல். சீசன் தொடங்குவதற்கு முன்னதாக சென்னை அணியின் முன்னணி தொடக்க ஆட்டக்காரரான டேவான் கான்வே காயம் காரணமாக இந்த சீசனில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டது. கால் விரலில் ஏற்பட்ட காயத்திற்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டார். அறுவை சிகிச்சைக்கு பின், தற்போது குணமடைந்து வரும் அவர், நடப்பு ஐ.பி.எல். சீசனின் பிளே ஆப் சுற்றுக்குள் சென்னை அணிக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் காயம் காரணமாக ஐ.பி.எல். தொடரில் இருந்து விலகுவதாக கான்வே அறிவித்துள்ளார். அவருக்கு பதிலாக இங்கிலாந்தை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளரான ரிச்சர்ட் கிளீசன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

மேலும் செய்திகள்