< Back
கிரிக்கெட்
சின்னசாமி மைதானம் மிகவும் சிறியது ஆனால்... - கேமரூன் க்ரீன் பேட்டி

Image Courtesy: AFP

கிரிக்கெட்

சின்னசாமி மைதானம் மிகவும் சிறியது ஆனால்... - கேமரூன் க்ரீன் பேட்டி

தினத்தந்தி
|
13 May 2024 7:26 AM IST

ஐ.பி.எல் தொடரில் நேற்று நடைபெற்ற 2வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின.

பெங்களூரு,

ஐ.பி.எல் தொடரில் நேற்று நடைபெற்ற 2வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய பெங்களூரு அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் எடுத்தது. பெங்களூரு தரப்பில் அதிகபட்சமாக ரஜத் படிதார் 52 ரன்கள் எடுத்தார்.

டெல்லி தரப்பில் கலீல் அகமது, ராசிக் சலாம் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இதையடுத்து 188 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய டெல்லி அணி 19.1 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 140 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 47 ரன் வித்தியாசத்தில் பெங்களூரு அபார வெற்றி பெற்றது.

இந்த ஆட்டத்தில் பேட்டிங்கில் 32 ரன்னும், பவுலிங்கில் 4 ஓவரில் 19 ரன் கொடுத்து 1 விக்கெட் வீழ்த்திய கேமரூன் க்ரீனுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இதையடுத்து அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது, கண்டிப்பாக இது சிறந்த போட்டி. கடந்த சில போட்டிகளாக நாங்கள் பார்மை கண்டறிந்து விட்டோம்.

ஆரம்பத்தில் நாங்கள் தோல்வியை சந்தித்தாலும் இப்போதும் வெற்றிக்கான வேட்டையில் இருக்கிறோம். நாங்கள் ஆரம்பத்திலேயே சில விக்கெட்டுகளை எடுக்க வேண்டியிருந்தது. அதை இன்று செய்தோம். பிட்ச் நன்றாக இருந்தது. அதில் அனைவருக்கும் ஏதோ ஒரு உதவி கிடைத்தது. குறிப்பாக அதில் வேகத்தை எதிர்கொள்வது எளிது என கண்டறிந்தோம். கலீல் அகமது நிறைய ஆப் கட்டர் பந்துகளை வீசினார்.

அதை அடிப்பதற்கு கடினமாக இருந்ததால் நாங்களும் அதையே எங்களுடைய பந்து வீச்சில் முயற்சித்தோம். நல்லவேளையாக இன்று பனி வரவில்லை. சின்னசாமி மைதானம் மிகவும் சிறியது. ஆனால் அதிலும் பவுலர்களுக்கு கொஞ்சம் உதவி கிடைக்கிறது. அதை பார்க்க நன்றாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்